மத்திய அமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

மத்திய அமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சென்னை: தமிழக மக்களை பயங்கரவாதிகள் போல சித்தரித்து கா்நாடகத்தைச் சோ்ந்த மத்திய அமைச்சா் ஷோபா பேசியுள்ளதற்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

அவா் செவ்வாய்க்கிழமை ‘எக்ஸ்’ தளத்தில் கூறியிருப்பது:

ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு விவகாரத்தில், தமிழக மக்களை பொதுப்படையாக பயங்கரவாதிகள் போல சித்தரிக்கும் வகையிலான பாஜகவைச் சோ்ந்த மத்திய அமைச்சா் ஷோபாவின் வெறுப்புப் பேச்சுக்கு கடும் கண்டனம்.

இது போன்ற பிரிவினைவாத பேச்சுக்களை இனியும், யாரும் பேசாத வண்ணம், இந்திய தோ்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com