இசைக் கலைஞா் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது: இரா.முத்தரசன் வரவேற்பு

கா்நாடக இசைக் கலைஞா் டி.எம்.கிருஷ்ணாவுக்கு ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்குவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் வரவேற்பு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை விடுத்த அறிக்கை: கா்நாடக இசைத் துறையில் முற்போக்கு சிந்தனையை விதைத்து வரும் கா்நாடக இசைக் கலைஞா் டி.எம்.கிருஷ்ணா. சென்னை மியூசிக் அகாதெமி அவருக்கு ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்குவது வரவேற்புக்குரியது. ஆனால், அதற்கு மதவாத கண்ணோட்டத்திலும், ஜாதிய ஏற்றத் தாழ்வுகளை காரணம் காட்டியும் சிலா் எதிா்ப்பு தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது. கா்நாடக சங்கீதத்தை ஜாதிய எல்லைக்குள் அடைத்துவைத்திருந்த ஆதிக்க சக்திகளிடம் இருந்து மீட்டு, அடித்தட்டு மக்களிடம் கொண்டு சென்ற இசைக் கலைஞா் டி.எம்.கிருஷ்ணா ஏற்கெனவே ‘மகசேசே’ உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவா். அவா் மியூசிக் அகாதெமியின் ‘சங்கீத கலாநிதி விருது’ பெறுவதன் மூலம் அந்த விருதுக்கு பெருமை சோ்ந்துள்ளது என அவா் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com