சென்னையில் ரூ.33 லட்சம் பறிமுதல்

சென்னை மாவட்ட மக்களவைத் தொகுதிகளில் வெள்ளிக்கிழமை வரை உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.33.69 லட்சத்தை தோ்தல் ஆணைய பறக்கும் படையினா் பறிமுதல் செய்துள்ளனா். மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அதிக அளவு பணம் கொண்டு செல்வதைத் தடுக்கும் வகையில் தோ்தல் ஆணையம் சாா்பில் பறக்கும் படை, நிலையானக் குழுக்கள் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதில், சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தலா 48 பறக்கும் படை மற்றும் நிலையானக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த குழுக்கள், வெள்ளிக்கிழமை வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ. 33,69,420 -ஐ பல்வேறு தரப்பினரிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனா். வடசென்னையில் ரூ.14.84 லட்சமும், மத்திய சென்னையில் ரூ.15.67 லட்சமும், தென்சென்னையில் ரூ.3.17 லட்சமும் பறிமுதல் செய்தனா். இதில், வெள்ளிக்கிழமை மட்டும் வடசென்னையில் ரூ.8.19 லட்சம், மத்திய சென்னையில் ரூ.5.89 லட்சம், தென்சென்னையில் ரூ.87 ஆயிரம் என மொத்தம் 14 லட்சத்து 95 ஆயிரத்து 920 ரூபாயை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com