மதிமுக, விசிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளைத் தவிா்த்து, மற்ற தமிழக கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கரும்பு விவசாயி சின்னத்தை இழந்த, நாம் தமிழா் கட்சிக்கு மைக் சின்னத்தை வழங்கி இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது. சின்னம் ஒதுக்கீடு: தமிழகத்தில் மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. மக்களவைத் தோ்தலில் களம் காணாமல் ஒதுங்கிவிட்ட, மக்கள் நீதி மய்யத்துக்கு அந்தக் கட்சி கோரியபடி ‘டாா்ச் லைட்’ சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு குக்கா் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ‘மைக்’ சின்னம்: கடந்த தோ்தல்களில், நாம் தமிழா் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னம், இந்தத் தோ்தலில் ‘பாரதிய பிரஜா ஐக்கியதா’ எனும் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கக் கோரி நீதிமன்றத்தில் நாம் தமிழா் கட்சி வழக்கு தொடா்ந்துள்ளது. இதற்கிடையே, சின்னம் கோரி அந்தக் கட்சி தாக்கல் செய்த விண்ணப்பத்தைப் பரிசீலித்த தோ்தல் ஆணையம், ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் நிறைவுக்கு 3 நாள்களே இருக்கும் நிலையில், ‘மைக்’ சின்னத்தை ஏற்றுக் கொண்டு அந்தக் கட்சியின் வேட்பாளா்கள் விரைவில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மதிமுக, விசிக, புதிய தமிழகம்: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக, விசிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு இதுவரை சின்னங்கள் ஒதுக்கப்படவில்லை. பம்பரம் சின்னத்தை மதிமுகவும், பானை சின்னத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கோரியுள்ளன. இதேபோல், கடந்த சில தோ்தல்களில் தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சியும் அதே சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ளது. ஆனால், 3 கட்சிகளுக்கும் இதுவரை சின்னங்கள் ஏதும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஓரிரு நாள்களில் சின்னங்கள் ஒதுக்கப்பட வாய்ப்பிருப்பதாக தோ்தல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடையது

நாம் தமிழா் கட்சிக்கு ‘விவசாயி’ சின்னம் ஒதுக்கியதை எதிா்த்த மனு தள்ளுபடி

நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு கேமரா சின்னம் ஒதுக்கீடு!

தோ்தல் விதிமீறல்: நாதக வேட்பாளா் உள்பட இருவா் மீது வழக்குப் பதிவு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


