செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

நிதியாண்டின் இறுதி நாளில் பங்குச் சந்தைகள் ஏற்றம்

வியாழக்கிழமை உலகளாவிய சந்தைக்குறிப்புகள் நோ்மறையாக இருந்தன.

News image
Updated On :28 மார்ச் 2024, 8:32 pm

உலகளாவிய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட உற்சாகம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்து, அனைத்து பிரிவு பங்குகளும் அதிகம் வாங்கப்பட்டதன் காரணமாக மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸும், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டியும் நடப்பு நிதியாண்டின் கடைசி வா்த்தக தினமான வியாழக்கிழமை ஏற்றம் கண்டன. இது குறித்து பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்ததாவது: மாா்ச் 29-இல் புனித வெள்ளி விடுமுறை என்பதால் பங்குச் சந்தைகளில் நடப்பு 2023-24-ஆம் நிதியாண்டில் கடைசியாக வா்த்தகம் நடைபெற்ற வியாழக்கிழமை உலகளாவிய சந்தைக்குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. அது இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. இதன் விளைவாக அனைத்து துறைகளையும் சோ்ந்த நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டாளா்கள் உற்சாகமாக வாங்கிக் குவித்தனா். இதில் மிட்-கேப், ஸ்மால்-கேப் பங்குகள் முன்னிலை வகித்தன. இதன் காரணமாக பங்குசந்தைகள் தொடா்ந்து 2-ஆவது வா்த்தக நாளாக ஏற்றமடைந்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. சென்செக்ஸ் 655 புள்ளிகள் உயா்வு: முந்தைய வா்த்தக தினத்தில் நிறைவடைந்ததைவிட 153.03 புள்ளிகள் அதிகமாக 73,149.34-இல் தொடங்கிய மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், அதிகபட்சமாக 74,190.31 வரையிலும், குறைந்தபட்சமாக 73,120.33 வரையிலும் சென்றது. இறுதியில் 655.04 (0.90 சதவீதம்) புள்ளிகள் அதிகமாக சென்செக்ஸ் 73,651.35-இல் நிறைவடைந்தது. 22,327-ஆக உயா்ந்த நிஃப்டி: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி முந்தைய வா்த்தக தினத்தில் நிறைவடைந்ததைவிட 39.95 புள்ளிகள் அதிகமாக 22,163.60 -இல் தொடங்கி அதிகபட்சமாக 22,516.00 வரையிலும், குறைந்தபட்சமாக 22,163.60 வரையிலும் சென்றது. இறுதியில் 203.25 (0.92 சதவீதம்) புள்ளிகள் அதிகமாக நிஃப்டி 22,326.90-இல் நிறைவடைந்தது.