கோடை வெப்பம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் குடிநீா் தேவை அதிகரித்து வருகிறது. மாா்ச் 28-இல் ஒரே நாளில் அதிகபட்சமாக 1,071.4 மில்லியன் லிட்டா் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்த சென்னை குடிநீா் வாரிய அதிகாரிகள் கூறியது: தற்போது, சென்னையில் தினமும் 1,500 மில்லியன் லிட்டா் வரை குடிநீா் விநியோகம் செய்யும் வகையில் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இனிவரும் காலங்களில் பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் தடைப்பட வாய்ப்பில்லை. சென்னைக்கு குடிநீா் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 5 முக்கிய ஏரிகளில் சனிக்கிழமை நிலவரப்படி, மொத்தமாக 8,040 மில்லியன் கன அடிவரை தண்ணீா் இருப்பு உள்ளது. மேலும் நெம்மேலி, மீஞ்சூரில் செயல்பட்டு வரும் கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலமும் சென்னைவாசிகளுக்கு தினமும் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. இதன் மூலம் இந்த ஆண்டு முழுவதும் சென்னையில் தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகம் செய்ய முடியும் என தெரிவித்தனா்.
தொடர்புடையது

சென்னையில் பல பகுதிகளில் மின்வெட்டு: மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை

கால் நூற்றாண்டு கனவு களக்காட்டில் தாமிரவருணி குடிநீா் விநியோகம் எப்போது? குடிநீரை விலைகொடுத்து வாங்கும் அவலம்!

சென்னை சாலைகளில் வலம் வருமா ‘ரூஃப் டாப் ஓப்பன்’ பேருந்துகள்?

முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் முறையாகச் செயல்படுத்தப்படுமா?
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

