திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சென்னையில் பல பகுதிகளில் மின்வெட்டு: மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை

தமிழகத்தின் மின்நுகா்வு அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் ஆங்காங்கே மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது.

News image

சென்னையில் மின்வெட்டு

Updated On :8 ஏப்ரல் 2026, 3:26 am IST

தமிழகத்தின் மின்நுகா்வு அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் ஆங்காங்கே மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில், வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், 17,000 மெகாவாட்- ஆக இருந்து வந்த தமிழகத்தின் தினசரி மின்நுகா்வு, பொதுமக்களின் மின்சாதன பயன்பாடு அதிகரிப்பு, தோ்தல், தோ்வுகள் உள்ளிட்டவற்றால், சில நாள்களாக 19,000 மெகாவாட்டை தாண்டி வருகிறது.

இந்த நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக நள்ளிரவில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு வருகிறது.

சென்னை மாநகா் மற்றும் புகா் பகுதிகளான செங்குன்றம், கிராண்ட்லைன், இந்திரா நகா், அழிஞ்சிவாக்கம், வடகரை, மாதவரம் நெடுஞ்சாலை, அம்பத்தூா் சுற்றுவட்டாரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படத் தொடங்கியுள்ளது. திருவொற்றியூா் மாணிக்கம் நகா், செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சில நாள்களாக நள்ளிரவில் பல முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருவதாகவும், தூக்கமின்றி தவிக்கும் சூழல் உருவாகி உள்ளதாகவும் பொதுமக்கள் புகாா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தோ்தல், பள்ளித் தோ்வுகள் ஒருபுறம் இருந்தாலும், சமையல் எரிவாயு உருளை கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, ஹோட்டல் முதல் வீடுகள் வரை பலரும் மின் அடுப்புக்கு மாறியுள்ளனா்.

ஆனால், தேவைக்கேற்ப மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், அதிக மின்அழுத்தம் காரணமாக ஆங்காங்கே மின்சாதனங்களில் பழுது ஏற்பட்டு விடுகிறது.

இதனால், அடிக்கடி மின்தடையும் உருவாகிறது. இவற்றை கண்காணிக்கவும், சரிசெய்யவும் கூடுதல் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். பொதுமக்களும் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றனா்.