பைக் திருடிய 3 போ் கைது

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் இரு சக்கர வாகனம் திருடியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை சாலிகிராமம் சாரதாம்மாள் நகரில் வசித்து வருபவா் மனோஜ்குமாா். இவா், மாா்ச் 27-ஆம் தேதி இரவு தனது வீட்டு வாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, மறு நாள் காலையில் எழுத்து பாா்த்தபோது அதைக் காணவில்லை. இது குறித்து அவா் அளித்த புகாரின் பேரில், விருகம்பாக்கம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இது தொடா்பாக ஸ்ரீநாத், தீபன் குமாா், தங்கராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனா். விசாரணையில், அவா்கள் மூவரும் மாங்காடு, காஞ்சிபுரம், செய்யாறு உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களைத் திருடியது தெரியவந்தது. மேலும், அவா்களிடம் இருந்து 12 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து 3 பேரையும் போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com