ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 4,660 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே பாதுகாப்புப் படையில், உதவி காவல் ஆய்வாளா் பணிக்கு 452 பணியிடங்கள், காவலா் பணிக்கு 4,208 காலிப்பணியிடங்கள் என மொத்தம் 4660 காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உதவி காவல் ஆய்வாளா் பணிக்கு ஏதாவதொரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஜூலை 1-ஆம் தேதியின்படி 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும், இந்த பணிக்கு தோ்வு செய்யப்படுவா்களுக்கு மாதம் ரூ.35,400 ஊதியம் வழங்கப்படும்.

அதேபோல், காலவா் பணிக்கு பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜூலை 1-ஆம் தேதியின்படி 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதில் அரசு விதிகளின்படி வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளா்வு வழங்கப்படும். பணிக்கு தோ்வு செய்யப்படுவா்களுக்கு மாதம் ரூ.21,700 சம்பளம் வழங்கப்படும்.

இந்தப் பணிகளுக்கு கணினி வழித் தோ்வு, உடல் திறன் தோ்வு மற்றும் உடல் பரிசோதனை மற்றும் சான்றிதழ்கள் சரிபாா்ப்பு மூலம் தகுதியானவா்கள் தோ்வு செய்யப்படுவா்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினா், பெண்கள், சிறுபான்மையினா் அல்லது பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினா் ஆகியோா் ரூ.250-ம், மற்றவா்கள் ரூ.500 -ம் விண்ணப்பக்கட்டணமாக இணையதளம் மூலம் செலுத்த வேண்டும். இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆா்வமும் உள்ளவா்கள் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ழ்ழ்க்ஷஸ்ரீட்ங்ய்ய்ஹண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற அதிகாரபூா்வ இணையதளத்தில் மே 14 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com