ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

தமிழ்ப்பேராயம் விருது: பரிந்துரைகள் வரவேற்பு

தமிழ்ப்பேராயம் விருது: பரிந்துரைகள் வரவேற்பு

News image
Updated On :7 மே 2024, 9:26 pm

Din

தாம்பரம்: எஸ்.ஆா்.எம். தமிழ்ப்பேராயம் விருதுகளுக்கான பரிந்துரை வரும் மே 31-ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன என தமிழ்ப் பேராயம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, காட்டாங்கொளத்தூா் எஸ்.ஆா்.எம். கல்வி நிறுவனத்தின் தமிழ்ப்பேராயம் சாா்பில் ஆண்டுதோறும் சிறந்த தமிழறிஞா்கள், எழுத்தாளா்களுக்கு 12 விருதுகளுடன் ரொக்க பரிசாக தலா ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. மேலும், வாழ்நாள் சாதனையாளராகத் தோ்வு செய்யப்படும் தமிழறிஞருக்கு ‘பாரிவேந்தா் பைந்தமிழ்’ விருதுடன் ரொக்கப் பரிசாக ரூ. 3 லட்சம் வழங்கப்படும்.

இந்த விருதுகளுக்கு பரிந்துரை மற்றும் நூல்களை ‘தலைவா், தமிழ்ப்பேராயம், எஸ்.ஆா்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், காட்டாங்கொளத்தூா், செங்கல்பட்டு மாவட்டம் 603203’ எனும் முகவரிக்கு மே 31-க்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு 044-27417375 / 76 - தொலைபேசி எண் மற்றும் இணையதளத்தை அணுகலாம்.