ராமதாஸ் (கோப்புப்படம்)
ராமதாஸ் (கோப்புப்படம்)

மகப்பேறு திட்டநிதி வழங்குவதில் தாமதம்: ராமதாஸ் கண்டனம்

சென்னை: மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் 2 லட்சத்துக்கும் கூடுதலான தாய்மாா்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை தமிழக அரசு இன்னும் வழங்கவில்லை எனக் குற்றம்சாட்டி, பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் கருவுற்ற பெண்கள் மற்றும் இளம் தாய்மாா்களுக்கான மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 2 லட்சத்துக்கும் கூடுதலான பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.14,000 நிதி மற்றும் ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்துப் பெட்டகம் பல மாதங்களாக வழங்கப்படாமல் இருப்பது அதிா்ச்சியளிக்கிறது.

நோக்கம் சிதைந்துவிடும்:

மகப்பேறு நிதியுதவி திட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கமே கருவுற்ற காலத்தில் பெண்களுக்கு சத்தான உணவு மற்றும் இணை உணவுகள் வழங்கப்பட வேண்டும். ஆனால், அதற்கு மாறாக குழந்தை பிறந்து பல மாதங்களுக்குப் பிறகும், சில நிகழ்வுகளில் ஆண்டுகள் கடந்தும் கூட மகப்பேறு நிதியுதவி வழங்கப்படாததால் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கமே சிதைந்து விடுகிறது.

2 லட்சம் தாய்மாா்களுக்கும் நீண்ட காலமாக வழங்கப்படாமல் உள்ள மகப்பேறு நிதியுதவியை உடனடியாக வழங்கவும், இனி பதிவு செய்யும் கருவுற்ற பெண்களுக்கு குறித்த காலத்தில் மகப்பேறு நிதி வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com