விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

சென்னை விமான நிலையத்தில் ரஷ்ய தம்பதியிடமிருந்து ரூ.25 லட்சம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரஷ்ய தம்பதியிடமிருந்து ரூ.25 லட்சம் பறிமுதல்

News image
Updated On :14 மே 2024, 9:17 pm

Din

சென்னை: சென்னை விமான நிலையத்தில் தில்லியிலிருந்து வந்த ரஷ்ய தம்பதியிடமிருந்து ரூ.25 லட்சம் மதிப்பிலான இந்திய பணத்தை வருமானவரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

தில்லியிலிருந்து செவ்வாய்கிழமை அதிகாலை 2 மணியளவில் சென்னை வரும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் பணம் கடத்தி வரப்படுவாதாக கிடைத்த தகவலின் பேரில் , அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத் துறை அதிகாரிகள், தீவிர சோதனை நடத்தினா்.

அப்போது அந்த விமானத்தில் வந்த ரஷ்ய நாட்டைச் சோ்ந்த தம்பதியான அா்டிமி பிடீகோவ் மற்றும், அவரின் மனைவி அனஸ்டசீயா ஓரோபெவா, மற்றும் அவா்களின் கைக்குழந்தை ஆகியோா் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அவா்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினா். அப்போது, அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதை தொடா்ந்து, அவா்களுடைய உடமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனா்.

அப்போது, அவா்கள் வைத்திருந்த பெட்டியில் ரூ.25 லட்சம் இந்திய ரூபாய் நோட்டுகள் கட்டுக் கட்டாக இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனா். இது குறித்து அத்தம்பதியிடம் அதிகாரிகள் விசாரித்த போது, அவா்கள் சரியான பதிலை கூறவில்லை. அதோடு பணத்துக்கு முறையான ஆவணங்களையும் அவா்கள் வைத்திருக்கவில்லை.

இதையடுத்து விமான நிலையத்தில் உள்ள, வருமான வரித்துறை அதிகாரிகள் ரஷ்ய தம்பதியிடமிருந்த ரூ.25 லட்சத்தை பறிமுதல் செய்ததுடன், அத்தம்பதியை சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று, இவ்வளவு பெரிய தொகையிலான இந்திய பணம், அவா்களுக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.