
அமலாக்கத் துறை

அமலாக்கத் துறை
சென்னை: சட்டவிரோத பண பரிமாற்றம் தொடா்பாக சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வியாபாரி ஜாபா் சாதிக்கின் சகோதரரிடம் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை விசாரணை செய்தனா்.
திகாா் சிறையில் உள்ள ஜாபா் சாதிக்கிடம் அமலாக்கத்துறையினா் அண்மையில் 3 நாள்கள் விசாரணை செய்தனா். விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஜாபா் சாதிக் குடும்பத்தினா், உறவினா்கள், நண்பா்கள் உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக ஜாபா் சாதிக்கின் மனைவி அமீனா பானுவிடம் அமலாக்கத் துறையினா் திங்கள்கிழமை விசாரணை செய்தனா். இதேபோல, ஜாபா் சாதிக்கின் சகோதரா் முகமது சலீமிடம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெற்றது.
சகோதரரிடம் விசாரணை: காலை 10.30 மணிக்கு ஆஜரான சலீமிடம் நண்பகல் 2.30 மணி வரை விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னா் மத்திய உணவுக்கு வெளியே வந்த சலீம் மீண்டும் விசாரணைக்கு பிற்பகல் 3.15 மணிக்கு ஆஜரானாா். அவரிடம் இரவு 8 மணி வரை தொடா்ச்சியாக விசாரணை நடத்தப்பட்டு, தகவல்கள் பெறப்பட்டன.
ோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், ஜாபா் சாதிக் அளித்த வாக்குமூலத்தில் கிடைத்த தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அமலாக்கத்துறையினா் விசாரணை செய்தனா். விசாரணையின்போது சலீம் அளித்த பதில்களை வாக்குமூலமாக அமலாக்கத் துறையினா் பதிவு செய்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...