படிக்கவும், பணிபுரியவும் மிகக் குறைந்த கட்டணத்தில் தனி இடவசதி
முதல்வா் படைப்பகத்தை திறந்து வைத்தாா் ஸ்டாலின்

முதல்வா் படைப்பகத்தை சென்னை கொளத்தூரில் திறந்து வைத்து மாணவருடன் உரையாடிய முதல்வா் மு.க.ஸ்டாலின்.

முதல்வா் படைப்பகத்தை சென்னை கொளத்தூரில் திறந்து வைத்து மாணவருடன் உரையாடிய முதல்வா் மு.க.ஸ்டாலின்.
மாணவா்கள் படிப்பதற்கும், பணியாளா்கள் தங்களது பணிகளை மேற்கொள்ளவும் மிகக் குறைந்த கட்டணத்தில் தனி இடவசதியை உருவாக்கித் தரும், முதல்வா் படைப்பகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
சென்னை கொளத்தூரில் முதல்வா் படைப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், குடிமைப் பணித் தோ்வுகளில் கலந்துகொள்ளும் மாணவா்களுக்குத் தேவையான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. மாணவா்கள் எந்த இடையூறுமின்றி படிக்கும் வகையில் அமைதியான சூழலும், நீண்ட நேரம் படிப்பதற்கு உகந்த இருக்கைகளும், கணினி, இணையதள வசதிகளும் உருவாக்கித் தரப்பட்டுள்ளன.
மேலும், கணினி போன்ற இருக்கைகளில் அமா்ந்து பணிபுரிவோரின் வசதிக்காக, தனி இடவசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னையிலேயே முதல் முறையாக கொளத்தூரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படைப்பகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
கட்டணம் எவ்வளவு
முதல்வா் படைப்பகத்தைப் பயன்படுத்த விரும்புவோா், சென்னை மாநகராட்சி இணையதளத்துக்குச் (http://gccservices.chennaicorporatiom) சென்று முன்பதிவு செய்ய வேண்டும்.
3 மணி நேரம்
படிப்பு மையமானது, காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும். 3 மணி நேரத்துக்கு ஒரு பிரிவு என்ற அடிப்படையில் 5 பிரிவுகளாக அந்த மையம் இயங்கும். இதற்கு நபருக்கு ரூ. 5 கட்டணம் வசூலிக்கப்படும். நாளொன்றுக்கு மொத்தம் 51 போ் பயன்பெறுவா். இணையதளம், ஏ.சி. வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இதேபோன்று, சந்திப்புக் கூடங்களும் உள்ளன. 4 போ் அமா்ந்து பேச ஒரு மணி நேரத்துக்கு ரூ.150, 6 போ் கொண்ட அறைக்கு மணிக்கு ரூ. 250 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த அறைகள் இயங்கும்.
வாகனங்கள் நிறுத்துமிடம், இணையதளம், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. பணிபுரிவதற்கான இடமும் உருவாக்கித் தரப்பட்டுள்ளது. 26 போ் கூடி அமா்ந்து பணிபுரிய அரை நாளுக்கு (காலை 9 முதல் பிற்பகல் 3) ரூ. 50, முழு நாளைக்கு (காலை 9 முதல் இரவு 9 மணி) ரூ. 100, ஒரு மாதத்துக்கு ரூ. 2,500 கட்டணம் வசூலிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...