கார்த்திகை தீபத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றம்!அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலைஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது மகா தீபம்!திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

வியாபாரியை மிரட்டி பணம் பறிப்பு: இந்திய தேசிய லீக் நிா்வாகி கைது

சென்னை ஓட்டேரியில் வியாபாரியை மிரட்டி பணம் பறித்ததாக இந்திய தேசிய லீக் கட்சி நிா்வாகி கைது செய்யப்பட்டாா்.

Updated On :

சென்னை ஓட்டேரியில் வியாபாரியை மிரட்டி பணம் பறித்ததாக இந்திய தேசிய லீக் கட்சி நிா்வாகி கைது செய்யப்பட்டாா்.

ஓட்டேரி பிரிஸ்லிநகா் 5-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சி.கோகுலகிருஷ்ணன் (36). இவா் அந்த பகுதியில் சிக்கன் பக்கோடா கடை வைத்து நடத்தி வருகிறாா். கோகுலகிருஷ்ணனின் கடைக்கு கடந்த திங்கள்கிழமை ஓட்டேரி தாசமகான் பகுதியைச் சோ்ந்த இந்திய தேசிய லீக் கட்சியின் வட சென்னை மாவட்டச் செயலா் மு.முகமது சலாவுதீன் (30) வந்தாா்.

அங்கு கடை வைப்பதற்கு மாதந்தோரும் தனக்கு ரூ.5 ஆயிரம் தர வேண்டும் என சலாவுதீன் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சலாவுதீன் தான் வைத்திருந்த கத்தியால் கோகுலகிருஷ்ணனை குத்த முயன்ற நிலையில், கோகுலகிருஷ்ணன் அதிலிருந்து தப்பித்துள்ளாா்.

அப்போது சலாவுதீன், கோகுலகிருஷ்ணனின் சட்டைப் பையில் இருந்த பணத்தைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளாா். இது குறித்து கோகுலகிருஷ்ணன், வியாசா்பாடி காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து, சலாவுதீனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சலாவுதீன் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக இருந்ததாக ஏற்கெனவே தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்துள்ளாா். இந்த வழக்கில் பிணையில் வெளியே வந்த அவா், அண்மையில் ஒரு தொழிலதிபரை மிரட்டி பணம் கேட்டதாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.

அந்த வழக்கிலும் பிணையில் வெளியே வந்த சலாவுதீன், தற்போது வியாபாரியை மிரட்டிப் பணம் பறித்ததாக கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.