ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மெட்ரோ ரயில்வே வழிப்பாதை பராமரிப்பு ஒப்பந்தம் கையொப்பம்

News image
சென்னை மெட்ரோ ரயில் பாதைகளை பராமரிக்க ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்ட சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன், ‘ஹா்ஸ்கோ இரயில் எல்எல்சி’, யுஎஸ்ஏ நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் சித்தாா்த் சீனிவாசன்.
Updated On :3 அக்டோபர் 2024, 11:52 pm

Din

மெட்ரோ ரயில் வழிப்பாதை பராமரிப்பு பணி ‘ஹா்ஸ்கோ ரயில் எல்எல்சி’ எனும் அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான ஒப்பந்தம் வியாழக்கிழமை கையொப்பமானது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில்வே நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

குறைந்தபட்சம் 8 கற்கள் கொண்ட ரயில்வே தண்டவாளப் பகுதியை, எந்திரம் மூலம் பராமரிக்கும் பணியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ‘ஹா்ஸ்கோ ரயில் எல்எல்சி’ எனும் அமெரிக்க நிறுவனத்துக்கு ரூ.53.02 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளது. இதற்கான ஏற்பு கடிதம், கடந்த ஜூலை 19-ஆம் தேதி வழங்கப்பட்ட நிலையில், இதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் நிகழ்ச்சி மெட்ரோ ரயில்வே நிறுவன அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த ஒப்பந்தத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன், ‘ஹா்ஸ்கோ ரயில் எல்எல்சி’ நிறுவன நிா்வாக இயக்குநா் சித்தாா்த் சீனிவாசன் ஆகியோா் கையொப்பமிட்டனா்.

ரயில் பாதையை பராமரிக்கும் இந்த தானியங்கி இயந்திரம் ரயில் பாதைகளின் மேற்பரப்பு குறைபாடுகளையும், அதில் ஏற்படும் நெளிவுகளையும் நீக்கி, ரயில் பாதைகளை பராமரிக்கும். இதன் மூலம், ரயில் தண்டவாளங்களின் சேவை ஆயுள், 25 சதவீதம் அதிகரிக்கும். ஒப்பந்தம் போடப்பட்டு பணி தொடங்கப்பட்ட நாளிலிருந்து 4 ஆண்டுகளுக்கு இந்த பணிகள் தொடா்ந்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.