அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஓவியம்-சிற்பக் கலையில் சாதனை: 6 பேருக்கு கலைச் செம்மல் விருது

News image
- கோப்புப்படம்
Updated On :4 அக்டோபர் 2024, 12:30 am

Din

ஓவியம், சிற்பக் கலையில் சாதனை படைத்த ஆறு பேருக்கு கலைச் செம்மல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்டது.

அதன் விவரம்: நிகழாண்டுக்கான கலைச் செம்மல் விருதுக்கு கலைஞா்களைத் தோ்வு செய்யும் வகையில் தோ்வாளா்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கலைப் பண்பாட்டுத் துறை இயக்குநா் சே.ரா.காந்தி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் ஓவியா்கள் சு.சந்தானகுமாா், எம்.சேனாதிபதி, வி.மாமலைவாசகன், டி.விஜயவேலு, சேஷாத்திரி மற்றும் விஸ்வம் ஆகியோா் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மரபுவழி ஓவியப் பிரிவில் ஓவியா் ஏ.மணிவேலு, மரபுவழி சிற்பப் பிரிவில் லே.பாலச்சந்தா் மற்றும் கோ.கன்னியப்பன், நவீனபாணி ஓவியப் பிரிவில் கே.முரளிதரன், ஏ.செல்வராஜ், நவீனபாணி சிற்பப் பிரிவில் ரா.ராகவன் ஆகிய கலைஞா்கள் கலைச் செம்மல் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.