

மலையாள நடிகர் மம்மூட்டிக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட நடிகர் மாதவன் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பில் 131 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் 13 பேருக்கு பத்ம பூஷண், 5 பேருக்கு பத்ம விபூஷண், 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்படவுள்ளன.
கலை, அறிவியல், இலக்கியம், மருத்துவம், கல்வி, விளையாட்டு, தொழில்நுட்பம், சமூகநலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொண்டவா்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டில், கலைத் துறையில் இருந்து பத்ம விருதுகள் பட்டியலில் இடம்பெற்றவர்கள்.
பத்ம பூஷண்
மம்மூட்டி - கேரளம்
அல்கா யாக்னிக் - மகாராஷ்டிரம்
பியூஷ் பாண்டே - மகாராஷ்டிரம்
ஆர். கணேஷ் - கர்நாடகம்
பத்ம விபூஷண்
தர்மேந்திர சிங் தியோல் - மகாராஷ்டிரம்
என். ராஜம் - உத்தரப் பிரதேசம்
பத்ம ஸ்ரீ
காயத்ரி பாலகிருஷ்ணன், ரஞ்சனி பாலகிருஷ்ணன் - தமிழ்நாடு
ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன் - தமிழ்நாடு
குரும்பா ஓவியக் கலைஞர் ஆர். கிருஷ்ணன் - தமிழ்நாடு
சிலை வடிப்பாளர் ராஜஸ்தபதி காளியப்பா கவுண்டர் - தமிழ்நாடு
மிருதங்க வித்வான் பக்தவச்சலம் - தமிழ்நாடு
நடிகர் மாதவன் ரங்கநாதன் - மகாராஷ்டிரம்
மகன்டி முரளி மோகன் - ஆந்திரம்
அனில் குமா ரஸ்தோகி - உத்தரப் பிரதேசம்
அரவிந்த் வைத்தியா - குஜராத்
பாரத் சிங் பாரதி - பிகார்
பிஷ்வ பந்து - மகாராஷ்டிரம்
பிக்லயா லடாக்ய திண்டா - மகாராஷ்டிரம்
சிரஞ்சி லால் யாதவ் - உத்தரப் பிரதேசம்
தீபிகா ரெட்டி - தெலங்கானா
ஜோதிஷ் தேப்நாத் - மேற்கு வங்கம்
தமிழ்நாட்டில் 5 பேருக்கு பத்ம ஸ்ரீ
தமிழ்நாட்டில் இருந்து 5 பேருக்கு பத்ம ஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த கால்நடை மருத்துவ ஆராய்ச்சியாளர் புண்ணியமூர்த்தி நடேசனுக்கும் பத்ம ஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது.
மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவச்சலத்துக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மிருதங்கக் கலையில் அவர் ஆற்றிய சாதனைக்காக இந்த விருது வழங்கப்படவுள்ளது.
ஆன்மீகம் மற்றும் கலைத்துறையில் திருத்தணி ஓதுவார் சுவாமிநாதனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிலை வடித்தலில் சிறந்த பங்களிப்பு அளித்துவரும் சேலம் ராஜஸ்பதி காளியப்ப கவுண்டருக்கும் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெண்கல சிலைகளை வடித்தெடுப்பதில் மிகுந்த பங்களிப்பு செய்துள்ளார்.
அழியும் தருவாயிலுள்ள குரும்பா பழங்குடியின ஓவியக் கலையை பாதுகாத்து வரும் நீலகிரி ஆர். கிருஷ்ணனுக்கும் பத்மஸ்ரீ வழங்கப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.