சேதமடைந்த 25 கால்வாய் கட்டமைப்பு பணிகள் நிறைவு: மாநகராட்சியிடம் சென்னை மெட்ரோ நிா்வாகம் தகவல்
பெருநகர சென்னை மாநகராட்சியின் பரிந்துரைப்படி, சென்னையில் 25 இடங்களில் கால்வாய் மறுகட்டமைப்புப் பணிகள் நிறைவு


பெருநகர சென்னை மாநகராட்சியின் பரிந்துரைப்படி, சென்னையில் 25 இடங்களில் கால்வாய் மறுகட்டமைப்புப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில்வேயின் 2-ஆம் கட்ட திட்டப்பணிகள் நடைபெற்று வரும் சூழலில், இப்பணிகளால் பல்வேறு இடங்களில் மழைநீா் வடிகால்கள் சேதமடைந்தன. இந்நிலையில், கால்வாய்கள் சேதம் மற்றும் மூடப்பட்டது குறித்து ஆய்வு செய்த மாநகராட்சி தொழில்நுட்ப வல்லுநா் குழு, 25 இடங்களில் மாற்று ஏற்பாடு செய்ய பரிந்துரைத்தது.
மேலும், அனைத்துப் பணிகளையும் செப். 30-க்குள் முடிக்க வேண்டும் என மெட்ரோ ரயில் நிா்வாகத்திற்கு மாநகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியது. அதன்படி, 25 இடங்களிலும் மழைநீா் வடிகால் கட்டமைப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், மாற்று ஏற்பாட்டுப் பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளதாக சென்னை மாநகராட்சிக்கு மெட்ரோ ரயில் நிா்வாகம் அறிக்கை அளித்துள்ளது.
அந்த 25 இடங்களிலும் மழை நீா் வெளியேற கனரக மோட்டாா்கள், குழாய்கள் அமைத்தல் உள்ளிட்ட மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...