சென்னை மக்கள் கவனத்திற்கு: கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்!
சென்னையில் 3.5 நிமிட கால இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கம்!


சென்னை மெரீனா கடற்கரையில் இந்திய விமானப் படை சாகச நிகழ்ச்சியை கண்டு ரசித்தபின் மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல ஒரே நேரத்தில் புறப்பட்டதால் பேருந்துகளிலும் புறநகர் ரயில்களிலும் கூட்டம் அலைமோதியது.
இந்த நிலையில், பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க வசதியாக, சென்னையில் 3.5 நிமிட கால இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வண்ணாரப்பேட்டை மெட்ரோ - தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் வழித்தடத்தில் 3.5 நிமிட கால இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விம்கோ நகர் மெட்ரோ - விமான நிலைய மெட்ரோ வழித்தடத்தில் 7 நிமிட கால இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...