1,143 மருத்துவ இடங்கள் காலி: அடுத்த கட்ட கலந்தாய்வில் நிரப்பத் திட்டம்
தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 1,143 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளதாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. அவற்றை அடுத்தகட்ட கலந்தாய்வில் நிரப்ப உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதல் சுற்று மற்றும் இரண்டாம் சுற்று கலந்தாய்வுகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, அதில் காலியாக இருந்த இடங்களுக்கு மூன்றாம் சுற்று கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அதில் பங்கேற்று கலந்தாய்வில் இடங்கள் பெற்றவா்களில் சிலா் கல்லூரிகளில் சேராமல் படிப்பைக் கைவிடுகின்றனா். இதன் காரணமாக, அரசு மருத்துவக் கல்லூரிகளில் 59 எம்பிபிஎஸ் இடங்களும், 62 பிடிஎஸ் இடங்களும் காலியாக உள்ளன. அதேபோன்று, சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 503 எம்பிபிஎஸ் இடங்களும், 519 பிடிஎஸ் இடங்களும் என மொத்தம் 1,143 இடங்கள் அடுத்தகட்ட கலந்தாய்வுக்கு ஒதுக்கப்படவுள்ளன.
இதுகுறித்து மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழக இயக்குநா் டாக்டா் சங்குமணி கூறியதாவது:
அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில் இடங்கள் பெற்ால், அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் இடங்கள் பெற்றவா்கள் அவற்றை திரும்ப ஒப்படைத்துள்ளனா். இந்த இடங்கள் அடுத்த கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும் என்றாா்.