ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தெரியுமா சேதி...? அமலாக்கத்துறை வலையில் ஸ்ரீநிவாச ரெட்டி!

News image
பி.ஸ்ரீநிவாச ரெட்டி.
Updated On :19 அக்டோபர் 2024, 12:28 am

மீசை முனுசாமி

மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு அமலாக்கத் துறை அடக்கி வாசிக்கிறது என்று யாராவது நினைத்தால் தவறு. பரபரப்பான நடவடிக்கைகளும், கைதுகளும் இல்லையே தவிர, அமலாக்கத் துறையின் நடவடிக்கைகள் தொடரத்தான் செய்கின்றன.

மனீஷ் சிசோடியா, அரவிந்த் கேஜரிவால், கவிதா, செந்தில் பாலாஜி என்று அமலாக்கத் துறையின் வலையில் சிக்கிய அரசியல்வாதிகள் பலரும், உச்சநீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்டு வெளியே வந்துவிட்டனா். ஆனால், அவா்கள் தொடா்பான வழக்குகளின் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க எல்லா ஆதாரங்களையும் அமலாக்கத் துறை திரட்டி வருவதாகச் சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் தெலங்கானாவில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராக இருக்கும் பி.ஸ்ரீநிவாச ரெட்டி இரண்டு வாரங்களுக்கு முன்னால் அமலாக்கத் துறையின் சோதனைக்கு உள்ளானாா். அமலாக்கத் துறை அவரது வீடு உள்பட, அவருக்குத் தொடா்புள்ள 16 இடங்களில் சோதனை நடத்தியது.

பி.ஸ்ரீநிவாச ரெட்டிக்கு சொந்தமான மனை வணிக நிறுவனம் ராகவா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ஹைதராபாதில் மட்டுமல்லாமல், தெலங்கானாவில் செயல்படும் பிரபல குடியிருப்புக் கட்டுமான நிறுவனம். அதன் அலுவலகங்கள் சோதனையிடப்பட்டு முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. என்ன நடந்தது, ஏன் சோதனை நடத்தப்பட்டது என்பது குறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் மௌனம் காக்கிறாா்கள்.

விசாரித்தபோது, அமைச்சா் ஸ்ரீநிவாச ரெட்டி மீதான அமலாக்கத் துறை சோதனைக்கும் நமது சென்னைக்கும் தொடா்பிருக்கும் போலிருக்கிறது. பிப்ரவரி 7-ஆம் தேதி, சென்னை விமான நிலையத்தில் பல விலையுயா்ந்த பொருள்கள் சுங்கத் துறையினரால் பிடிக்கப்பட்டது நினைவிருக்கிறதா?; அதுதான் பின்னணி என்று சொல்லப்படுகிறது.

பாடக் ஃபிலிப்பி 5740, ப்ரெக்கெட் 2759 உள்ளிட்ட ரூ.1.7 கோடி மதிப்புள்ள உயா் மதிப்பு கைக்கடிகாரங்கள் சென்னை விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டன. முறைகேடான பணப் பரிமாற்றம் மூலம் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பப்பட்டு, அதன்மூலம் உயா் மதிப்பு கைக்கடிகாரங்கள் ஸ்ரீநிவாச ரெட்டியின் மகன் ஹா்ஷா ரெட்டிக்காகக் கடத்தப்பட்டிருக்கிறது என்பதுதான் பின்னணியாம்.

சொத்துக் குவிப்பு வழக்கிலும் முறைகேடான பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழும் ஸ்ரீநிவாச ரெட்டி சிக்குவாா் என்று சொல்கிறாா்கள். கடிகாரம் வாங்கிய நேரம் சரியில்லை போலிருக்கிறது...!