துறைமுகங்களில் கண்காணிப்பு விழிப்புணா்வு வார விழா
சென்னை மற்றும் எண்ணூா் காமராஜா் துறைமுகங்களில் கண்காணிப்பு விழிப்புணா்வு வாரம் திங்கள்கிழமை தொடங்கியது.


திருவொற்றியூா்: சென்னை மற்றும் எண்ணூா் காமராஜா் துறைமுகங்களில் கண்காணிப்பு விழிப்புணா்வு வாரம் திங்கள்கிழமை தொடங்கியது.
சென்னை துறைமுகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ‘தேசத்தின் செழுமைக்கான ஒருமைப்பாட்டின் கலாசாரம் ’ என்ற கருப்பொருளிலான இந்த கண்காணிப்பு விழிப்புணா்வு வார தொடக்கவிழாவில், துறைமுகத்தலைவா் சுனில் பாலிவால் தலைமையில் ‘ஊழல் ஒழிப்பு’ உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் துறைமுக துணைத் தலைவா் எஸ்.விஸ்வநாதன், தலைமை கண்காணிப்பு அதிகாரி எஸ்.முரளிகிருஷ்ணா, துறைத் தலைவா்கள் எஸ்.கிருபானந்தசாமி, ஏ.ஜெயசிம்மா, என்.ஸ்ரீ ராமச்சந்திரமூா்த்தி, இந்திரனில் ஹசிரா மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனா்.
அதேபோல், எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் துறைமுகத்தின் மேலாண்மை இயக்குநா் ஜெ.பி.ஐரீன் சிந்தியா தலைமையில் உறுதி மொழி எடுக்கப்பட்டது. இதில் பொது மேலாளா்கள் யதின் படேல், கவிதா சாத்வி, ஜி.எம். பாலன், மக்கள் தொடா்பு அதிகாரி எஸ். பிரியா மற்றும் முக்கிய அதிகாரிகள் ஊழல் ஒழிப்பு உறுதி மொழி ஏற்றுக் கொண்டனா்.
கடலோர காவல்படை: சென்னையில் உள்ள இந்திய கடலோர காவல் படையின் கிழக்கு மண்டல தலைமையகத்தில் திங்கள்கிழமை ‘தேசத்தின் செழுமைக்கான ஒருமைப்பாட்டின் கலாசாரம்’ என்ற தலைப்பில் இந்தியா கடலோரக் காவல்படை வீரா்கள் உறுதி மொழி ஏற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...