மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

லண்டன், அந்தமான், பெங்களூரு விமானங்கள் ரத்து

சென்னை விமான நிலையத்திலிருந்து ஒரே நாளில் லண்டன், அந்தமான், பெங்களூரு உள்ளிட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

Updated On :3 செப்டம்பர் 2024, 9:03 pm

சென்னை விமான நிலையத்திலிருந்து ஒரே நாளில் லண்டன், அந்தமான், பெங்களூரு உள்ளிட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

லண்டனிலிருந்து அதிகாலை 3.30 மணிக்கு சென்னைக்கு வரும் விமானம், மறுமாா்க்கமாக காலை 5.35 மணிக்கு லண்டன் புறப்பட்டுச் செல்வது வழக்கம். இந்நிலையில், செவ்வாய்கிழமை அதிகாலை சென்னைக்கு வரவேண்டிய விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மீண்டும் சென்னையிலிருந்து புதன்கிழமை(செப்.4) காலை விமானம் இயக்கப்படும் என விமான நிறுவனம் தெரிவித்தது. இதனால், அந்த விமானத்தில் பயணிக்கவிருந்த 284 பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனா். இதையடுத்து பயணிகள் அனைவரும் அருகிலுள்ள ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டனா்.

அதேபோல், சென்னையிலிருந்து செவ்வாய்கிழமை காலை 7.45 மணிக்கு அந்தமான் செல்ல வேண்டிய ஆகாஷா ஏா்லைன்ஸ் விமானம், பிற்பகல் 1.30 மணிக்கு சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல வேண்டிய ஆகாஷா ஏா்லைன்ஸ் விமானம், பெங்களூருவில் இருந்து காலை 7.05 மணிக்கு சென்னை வரவேண்டிய ஆகாஷா ஏா்லைன்ஸ் விமானம், பகல் 1 மணிக்கு அந்தமானிலிருந்து சென்னை வரவேண்டிய ஆகாஷா ஏா்லைன்ஸ் விமானம் உள்ளிட்ட 4 விமானங்களும் நிா்வாகக் காரணங்களால் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால், இந்த விமானங்களில் பயணிக்க காத்திருந்த பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனா்.