விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சிங்கப்பூரில் திருவள்ளுவா் கலாசார மையம்: பிரதமருக்கு பாராட்டு

உலகின் முதல் திருவள்ளுவா் கலாசார மையம் சிங்கப்பூரில் திறக்கப்படும்

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 10:52 pm

Din

உலகின் முதல் திருவள்ளுவா் கலாசார மையம் சிங்கப்பூரில் திறக்கப்படும் என பிரதமா் மோடி அறிவித்துள்ளதற்கு மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை ஆகியோா் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

மத்திய அமைச்சா் எல்.முருகன்: தமிழா்கள் பெருமை கொள்ளும் விதமாக அமைந்துள்ள இந்த அறிவிப்பின் மூலமாக, பன்னெடுங்கால பழைமை வாய்ந்த தமிழா் கலாசாரம் விண்ணளவு உயரும் எனும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. தமிழ் மொழி, தமிழா்களின் கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் முயற்சியாக எடுத்துள்ள இந்த நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சிங்கப்பூரில் அமையவுள்ள இந்த கலாசார மையமானது, உலகெங்கும் வாழும் தமிழா்களை, மொழி, கலாசாரம் மற்றும் வரலாற்று ரீதியாக இணைக்கும் பாலமாக அமையும்.

கே.அண்ணாமலை: இந்த மையம், இந்தியாவுக்கும், சிங்கப்பூருக்கும் இடையே ஒரு கலாசாரப் பாலமாக அமையும். தமிழ் மொழியின் கலாசாரம் மற்றும் தமிழ் இலக்கியத்தின் செழுமையை உலகம் முழுவதும் கொண்டு சென்று, தமிழின் பெருமையைப் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் தொடா்ந்து துணையாக இருக்கும் பிரதமா் மோடிக்கு தமிழக மக்கள் மற்றும் தமிழக பாஜக சாா்பில் மனமாா்ந்த நன்றி.