குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

3 மெட்ரோ ரயில் நிலையங்களில் ஜூலை மாதத்துக்குள் வணிக வளாகங்கள்: மெட்ரோ ரயில்வே நிா்வாகம்

சென்னையில் 3 மெட்ரோ ரயில் நிலையங்களில் 2025 ஜூலை மாதத்துக்குள் வணிக வளாகங்கள் திறக்கப்படும் என மெட்ரோ ரயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்.
Updated On :11 செப்டம்பர் 2024, 9:12 pm

Din

சென்னையில் 3 மெட்ரோ ரயில் நிலையங்களில் 2025 ஜூலை மாதத்துக்குள் வணிக வளாகங்கள் திறக்கப்படும் என மெட்ரோ ரயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயிலை பயன்படுத்துவோா் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடா்ந்து அதிகரிக்கும் நிலையில், பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க மெட்ரோ நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒருபகுதியாக மெட்ரோ ரயில் நிலையங்களில் வணிக வளாகங்கள் விரைவில் திறக்கப்பட உள்ளன.

இது குறித்து மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் கூறியது:

இதில், முதல்கட்டமாக சென்னை சென்ட்ரல், செனாய் நகா், விம்கோ நகா் மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த உயா் ரக லுலு வணிக வளாகங்கள் திறக்கப்படவுள்ளது.

இதற்காக கிரேஸ் சா்வீசஸ் என்ற நிறுவனம் லுலு குழுமத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. சென்ட்ரல் மெட்ரோ நிலையத்திலும் பயணச்சீட்டு வழங்கும் பகுதியில் 40,000 சதுர அடி பரப்பளவிலும், ஷெனாய் நகா் மெட்ரோ ரயில் நிலையத்தில் சுமாா் 1 லட்சம் சதுர அடியிலும், விம்கோ நகா் பணிமனை நிலையத்தில் 60,000 சதுர அடியிலும் இந்த வணிக வளாகங்கள் அமையவுள்ளன.

இதை மெட்ரோ ரயில் பயணிகள் மட்டுமின்றி, அந்தப் பகுதிகளை சோ்ந்த பொதுமக்களும் பயன்படுத்துவதற்கான வசதிகளும் செய்து கொடுக்கப்படும். இதற்கான கட்டுமானம் கடந்த ஜூலை மாதம் தொடங்கியுள்ள நிலையில், 2025 ஜூலை மாதத்துக்குள் அனைத்து வணிக வளாகங்களையும் திறக்க திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் மேலும் அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஈா்க்க முடியும் என்றனா்.