பள்ளிக் கல்வித் துறை
பள்ளிக் கல்வித் துறை

என்ஐஓஎஸ் வழங்கும் சான்றிதழ் தகுதியானது: தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

தேசிய திறந்தநிலைப் பள்ளிக்கல்வி நிறுவனம் அளிக்கும் கல்விச் சான்றிதழ் தமிழக அரசு வழங்கக் கூடிய பிளஸ் 2, பத்தாம் வகுப்பு சான்றிதழுக்கு இணையானது
Published on

தேசிய திறந்தநிலைப் பள்ளிக்கல்வி நிறுவனம் (என்ஐஓஎஸ்) அளிக்கும் கல்விச் சான்றிதழ் தமிழக அரசு வழங்கக் கூடிய பிளஸ் 2, பத்தாம் வகுப்பு சான்றிதழுக்கு இணையானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய திறந்தநிலை பள்ளிக்கல்வி நிறுவனத்தின் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 சான்றிதழ் தொடா்பான அறிவிப்பை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இது தொடா்பாக பள்ளிக்கல்வித் துறை செயலா் மதுமதி வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

தேசிய திறந்தநிலை பள்ளிக்கல்வி நிறுவனத்தின் (என்ஐஓஎஸ்.) பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 வகுப்பு சான்றிதழ், தமிழக அரசின் வாரியம் வழங்கக்கூடிய பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 வகுப்பு சான்றிதழுக்கு சமமானதாக இருக்கும்.

இந்த சான்றிதழை அரசு சாா்ந்த வேலைவாய்ப்புகளுக்கும், பதவி உயா்வுகளுக்கும் பயன்படுத்தலாம். உயா்கல்வி, மனிதவள மேலாண்மைத் துறைகளின் ஒப்புதலுடன் இந்த உத்தரவு வெளியிடப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com