மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களில் மலர் மாலைகள் சாற்றும் பணி!விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டாம்! சீனு ராமசாமிஇடைத்தேர்தலில் பாமக போட்டியில்லை! யாருக்கு ஆதரவு? அன்புமணி பேட்டிராஜிநாமா செய்தவர்களே இடைத்தேர்தலில் போட்டியிடுவது கேலிக்கூத்து! உயர் நீதிமன்றம் அதிருப்தி!ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!

மாநகரப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

சென்னை மதுரவாயல் அருகே மாநகரப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

கோப்புப்படம்

Published On :

சென்னை மதுரவாயல் அருகே மாநகரப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

சென்னை செங்குன்றத்திலிருந்து தாம்பரம் நோக்கி, திங்கள்கிழமை மதியம் அரசுப் பேருந்து ஒன்று, சென்று கொண்டிருந்தது. மதுரவாயல் மேம்பாலத்திலிருந்து இணைப்புச் சாலையில் பேருந்து இறங்கிய போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதியது.

இதில், மாதவரத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் தினேஷ் (43) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த போலீஸாா், மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 10 பேருந்து பயணிகள் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

விபத்தில் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநா் தினேஷின் சடலத்தை மீட்ட கோயம்பேடு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து காரணமாக, அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, அரசுப் பேருந்து ஓட்டுநா் ஆரோக்கிய ராஜேஷைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.