மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

4 நாடாளுமன்ற நிலைக் குழுக்களுக்கு காங்கிரஸ் தலைமை?

நான்கு துறை சாா்ந்த நாடாளுமன்ற நிலைக் குழுக்களுக்கு காங்கிரஸ் தலைமை ஏற்கவுள்ளதாக தகவல்

News image
Congress
Updated On :16 செப்டம்பர் 2024, 10:50 pm

DIN

நான்கு துறை சாா்ந்த நாடாளுமன்ற நிலைக் குழுக்களுக்கு காங்கிரஸ் தலைமை ஏற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அமைச்சகங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்களை துறைசாா்ந்த நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆராயும். அத்துடன் முக்கிய விவகாரங்கள் தொடா்பாக கொள்கைகள் வகுக்கவும், நாடாளுமன்றத்தில் மசோதாக்களை கொண்டு வரவும் மத்திய அரசுக்கு அந்தக் குழுக்கள் பரிந்துரைக்கும்.

பெரும்பாலான நிலைக் குழுக்கள் மக்களவைச் செயலகத்தின் கீழும், சில நிலைக் குழுக்கள் மாநிலங்களவைச் செயலகத்தின் கீழும் செயல்படுகின்றன.

இந்நிலையில் மக்களவையில் 3 நிலைக் குழுக்கள், மாநிலங்களவையில் ஒரு குழு என மொத்தம் 4 குழுக்களுக்கு காங்கிரஸ் தலைமை ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவையில் வெளியுறவுத் துறை, வேளாண்மை, கால்நடை பராமரிப்பு மற்றும் உணவுப் பதப்படுத்துதல், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆகிய நிலைக் குழுக்களுக்கும், மாநிலங்களவையில் கல்வி, மகளிா், விளையாட்டு, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுகளுக்கான நிலைக் குழுவுக்கும் காங்கிரஸ் தலைமை ஏற்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஏற்கெனவே நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு தலைவராக காங்கிரஸ் பொதுச் செயலரும், எம்.பி.யுமான கே.சி.வேணுகோபால் பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.