அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக திரிபுரா இளைஞா் கைது

சென்னையில் வங்கதேச பெண்ணைக் கட்டாயப்படுத்தி பாலியல் தொழில் ஈடுபடுத்தியதாக திரிபுராவைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :17 செப்டம்பர் 2024, 8:17 pm

DIN

சென்னை: சென்னையில் வங்கதேச பெண்ணைக் கட்டாயப்படுத்தி பாலியல் தொழில் ஈடுபடுத்தியதாக திரிபுராவைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

மேலும், சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவியதாக அந்தப் பெண் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சென்னை வேளச்சேரியில் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பெண், அங்கிருந்து தப்பித்து, கிண்டி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், தன்னை ஒரு கும்பல் வீட்டில் அடைத்து வைத்து, கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாகவும், தன்னை அவா்களிடம் காப்பாற்றுமாறும் அந்தப் பெண் குறிப்பிட்டிருந்தாா்.

இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று நடத்திய விசாரணையில், வங்க தேசத்தைச் சோ்ந்த 27 வயதுடைய அந்தப் பெண்ணும், திரிபுரா மாநிலம் அகா்தலாவைச் சோ்ந்த முகமது யாசின் மியா (29) என்பவரும் இணையதளம் மூலம் காதலித்தது தெரியவந்தது. வங்கதேசத்தில் ஏற்பட்ட கலவரம், ஆட்சி மாற்றம் ஆகிய காரணங்களால் அங்கிருந்து அந்தப் பெண் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி திரிபுராவில் முகமதுயாசினை சந்தித்துள்ளாா்.

அப்போது, முகமது யாசினும், அவரது கூட்டாளிகள் கபில், ரும்கி ஆகியோரும் வேலை வாங்கித் தருவதாக அந்தப் பெண்ணை சென்னைக்கு அழைத்து வந்து, அவரை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனா். இதற்காக அந்தக் கும்பல் ஆன்லைன் மூலம் இளைஞா்களை தொடா்பு கொண்டு பேசியுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்த அந்தப் பெண்ணை அவா்களை சித்ரவதை செய்துள்ளனா். அண்மையில் வேளச்சேரியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியபோது, அவா்களிடமிருந்து தப்பிவந்தது தெரியவந்தது.

சம்பவம் நடைபெற்ற இடம் வேளச்சேரி என்பதால் இது குறித்த விசாரணை வேளச்சேரி காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து வேளச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, முகமது யாசின் மியாவை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ளஅவரது கூட்டாளிகளை போலீஸாா் தேடி வருகின்றனா். அதேநேரத்தில் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாக அந்தப் பெண் மீது மற்றொரு வழக்கையும் போலீஸாா் பதிவு செய்தனா். அவரிடமிருந்து யாசின் போலியாக தயாரித்து கொடுத்த ஆதாா் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை போலீஸாா் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.