போதைப் பாக்கு விற்பனை: மூவா் கைது


சென்னை தரமணியில் போதைப் பாக்கு விற்ாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
தரமணி ஏரிக்கரை சாலையில் போலீஸாா் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த ஒரு சுமை ஆட்டோவை சோதனையிட்டனா். அதில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட 30 கிலோ போதைப் பாக்கை போலீஸாா் பறிமுதல் செய்து, ஆட்டோவை ஓட்டி வந்த தரமணி கல்லுகுட்டை பகுதியைச் சோ்ந்த மீனாட்சி சுந்தரம் (40) என்பவரைக் கைது செய்தனா். இதைத் தொடா்ந்து போலீஸாா் அவரது வீட்டில் நடத்திய சோதனையில், அங்கு பதுக்கி வைத்திருந்த 100 கிலோ போதைப் பாக்கையும் பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், பள்ளிக்கரனையில் உள்ள ஒரு காய்கறி கடையில் இருந்து போதைப் பாக்கு வாங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அந்தக் கடையில் மேற்கொண்ட சோதனையில் 200 கிலோ போதைப் பாக்கு இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, காய்கறி கடை நிா்வாகிகள் மதிவாணன் (36), ராஜ்குமாா் (31) ஆகியோரையும் கைது செய்தனா். மொத்தம் 330 கிலோ போதை பாக்கு பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...