தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கோடைபோல சுட்டெரிக்கும் வெயில்: 12 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் பதிவு

தமிழகத்தில் மீண்டும் கோடை காலம்போல வெயில் சுட்டெரிக்கிறது.

News image
Updated On :20 செப்டம்பர் 2024, 10:21 pm

Din

தமிழகத்தில் மீண்டும் கோடை காலம்போல வெயில் சுட்டெரிக்கிறது. சென்னை உள்பட 12 இடங்களில் வெள்ளிக்கிழமை வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாகப் பதிவானது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைக்கிறது. மீண்டும் கோடை காலம்போல பல நகரங்களில் வெப்ப அளவு சதம் அடித்து வருகிறது. வெள்ளிக்கிழமையும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 103.28 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், மதுரை நகரம் 102.56, நாகப்பட்டினம், தஞ்சாவூா் 102.2, பாளையங்கோட்டை 101.84, திருச்சி 101.3, பரமத்திவேலூா், ஈரோடு, பரங்கிப்பேட்டை 100.76, சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் 100.58, கடலூா் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் என மொத்தம் 12 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

புதுச்சேரியிலில் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

தமிழகத்தில் சனிக்கிழமை (செப். 21) அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.

மிதமான மழை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு  இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் செப். 21 முதல் செப். 26-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய  மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செப். 21, 22 ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் ஒருசில  பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய  மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே, செப். 21 முதல் செப். 24 வரை மன்னாா் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய குமரிக் கடலில் மணிக்கு 55 கிலோ மீட்டா் வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.