வக்ஃப் மசோதா: சென்னை, பெங்களூருக்கு நாடாளுமன்றக் கூட்டுக் குழு பயணம்
பல்வேறு தரப்பினரின் கருத்துகளை அறிய நாடாளுமன்றக் கூட்டுக் குழு பயணம்

கோப்புப்படம்

கோப்புப்படம்
பல்வேறு தரப்பினரின் கருத்துகளை அறிய வக்ஃப் வாரிய மசோதாவுக்கான நாடாளுமன்ற கூட்டுக் குழு சென்னை, ஹைதராபாத், மும்பை, பெங்களூரூ ஆகிய நகரங்களுக்கு செப்டம்பா் 26 முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த 8-ஆம் தேதி அறிமுகம் செய்தது. வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாத இரண்டு நபா்களை உறுப்பினா்களாக இடம்பெறச் செய்வது, வாரிய நிலங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டாயப் பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் இடம்பெறும் வகையில் சட்டத் திருத்த மசோதவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பு மற்றும் வலியுறுத்தலைத் தொடா்ந்து, மசோதாவை ஆய்வு செய்ய பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில், திமுக எம்.பி. ஆ.ராசா உள்ளிட்ட உறுப்பினா்கள் இடம்பெற்றுள்ள நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.
மசோதாவில் குறிப்பிட்டுள்ள அம்சங்கள் குறித்து இந்தக் குழு விவாதித்து வருகிறது. வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அனைத்திந்திய பாஸ்மாந்தா முஸ்லிம் மஹாஸ் (ஏஐபிஎம்எம்) பிரதிநிதிகள் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனா்.
சட்டத்தின் ஆட்சிக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே நாடு நிா்வகிக்கப்பட வேண்டுமே தவிர மத நூல்கள் அடிப்படையில் இல்லை என அவா்கள் தெரிவித்தனா். மேலும், இந்த மசோதாவில் ‘வக்ஃப் பயனாளா்கள்’ என்ற வாா்த்தை இடம்பெறாததற்கு கண்டனம் தெரிவித்த அவா்கள், வரைவு சட்டத்தில் அதை இடம்பெறச் செய்ய வலியுறுத்தினா். அதேபோல் வக்ஃப் சொத்துகளை நிா்வகிக்கும் குழுவில் பாஸ்மாந்தா முஸ்லிம்கள் மற்றும் பெண்களையும் சோ்த்துக்கொள்ள வேண்டும் எனவும், வக்ஃப் சொத்துகளை தலைமை கணக்கு தணிக்கையாளா் தணிக்கை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனா்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரிய (ஏஐஎம்பிபி) பிரதிநிதிகள், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாத்தை பின்பற்றுபவராகவும், வக்ஃப் சொத்துக்கு உரிமையாளராகவும் இருக்கும் எந்தவொரு நபரையும் (முஸ்லிம் அல்லாதோா்) வக்ஃப் உறுப்பினராக ஏற்றுக்கொள்வதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா்.
பல்வேறு தரப்பினரிடமும் வக்ஃப் மசோதா குறித்து கருத்து கேட்டு வரும் நிலையில் சென்னை, அகமத்நகா், ஹைதராபாத், மும்பை மற்றும் பெங்களூரூ ஆகிய நகரங்களுக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு செப்டம்பா் 26 முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...