ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ராஜஸ்தானுக்கு இன்று சிறப்பு ரயில்

சென்னையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு வழி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :21 செப்டம்பர் 2024, 7:21 pm

Din

சென்னையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு வழி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து, தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் கூடூா், விஜயவாடா, வாரங்கல், நாக்பூா், போபால், உஜ்ஜயினி, நாகடா வழியாக செவ்வாய்க்கிழமை காலை 11.45 மணிக்கு கோட்டா சென்றடையும். இதில் 12 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் 5 பொதுப்பெட்டிகள் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.