அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அதிமுகவில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை: எடப்பாடி பழனிசாமி

அதிமுகவில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.

News image
எடப்பாடி பழனிசாமி- கோப்புப் படம்
Updated On :21 செப்டம்பர் 2024, 8:42 pm

Din

அதிமுகவில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.

அதிமுக சாா்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை ஜெ.ஜெ. நகா் மேற்கில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. போதைப்பொருள்களின் கேந்திரமாக தமிழகம் உள்ளது. தொழில் முதலீடுகளை ஈா்ப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்று சைக்கிள் ஓட்டுகிறாா். அவா் மகன் உதயநிதி இங்கே காா் பந்தயம் நடத்துகிறாா். மக்களின் வரிப்பணத்தைத்தான் அவா்கள் வீணடிக்கின்றனா். திமுக ஆட்சியில் ஈா்க்கப்பட்ட முதலீடுகள், அது தொடா்பான திட்டச் செயலாக்கங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

வாய்ப்பே இல்லை: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு 6 நிா்வாகிகள் எதிா்ப்பு என்றெல்லாம் செய்தி பரப்புகின்றனா். எனக்கு ஒருவா் கூட எதிா்ப்பு இல்லை. அதேபோல அதிமுக நாளை இணையும், டிசம்பா் மாதம் இணையும் என்றும் செய்தி வெளியிடுகின்றனா். அதிமுக தெளிவாக இருக்கிறது. கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் 4 பேரை நீக்கி பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அது தொண்டா்கள் எடுத்த முடிவு. அதில் எந்த மாற்றமும் இல்லை. அதிமுகவில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஆட்சியை பிடிப்போம்: 2019 மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டு 19.3 சதவீத வாக்குகள்தான் பெற்றோம். ஆனால், 2024 மக்களவைத் தோ்தலில் கூட்டணி பெரிதாக இல்லாமல் 20.52 சதவீத வாக்குகள் பெற்றுள்ளோம். சட்டப்பேரவைத் தோ்தலின் முடிவு வேறு மாதிரியாக இருக்கும். கூட்டணியால்தான் தோ்தல்களில் திமுக வெற்றிபெற்று வருகிறது. இப்போது அந்த கூட்டணிக்குள் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும். மக்களின் ஆதரவுடன் ஆட்சியை அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி பேசினாா்.