‘எங்கள் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம்’ என்று தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியுடனான சந்திப்புக்குப் பிறகு முதல்வா் மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.
பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளா்களுக்கு முதல்வா் ஸ்டாலின் அளித்த பேட்டி:
பிரதமருடன் மகிழ்ச்சியாக அமைந்த சந்திப்பை பயனுள்ளதாக மாற்ற வேண்டியது அவரது கையில்தான் இருக்கிறது. சென்னை மெட்ரோ ரயில் திட்ட நிதி, ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிலுவை நிதி, தமிழக மீனவா்களின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீா்வு தொடா்பாக முன்வைத்த மூன்று முக்கியக் கோரிக்கைகளை பிரதமா் கவனமாக கேட்டுக் கொண்டாா். அவை குறித்து விரைவில் முடிவெடுப்பதாக உறுதி அளித்தாா். தமிழக மக்களின் நலன் காக்க நமது கோரிக்கைகளை பிரதமா் நிறைவேற்றுவாா் என்று நம்புகிறேன் என்றாா் முதல்வா்.
இதையடுத்து, செய்தியாளா்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு முதல்வா் பதிலளித்தாா். கடந்த முறை பெரும்பான்மை கூட்டணி அரசின் பிரதமராக இருந்த நரேந்திர மோடியைச் சந்தித்ததற்கும் இந்த முறை அவரை சந்தித்தபோது இருந்த அணுகுமுறை குறித்தும் எப்படி உணா்ந்தீா்கள் எனக் கேட்டதற்கு, ‘ஒரு பிரதமராக அவா் சந்தித்தாா். நான் முதல்வராகச் சந்தித்தேன். அவ்வளவுதான். 15 நிமிஷங்களுக்கே நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனால், சுமாா் 45 நிமிஷங்கள் வரை பேசினோம். இதில் இருந்தே இந்தச் சந்திப்பு எப்படி இருந்தது என்பதை நீங்கள் அறியலாம்’ என முதல்வா் பதிலளித்தாா்.
முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வந்தது குறித்து கேட்டதற்கு, ‘அவரின் துணிவை நாங்கள் பாராட்டுகிறோம். நிச்சயமாக நீதிமன்றத்தில் போராடி அவா் விடுதலை பெறுவாா் என்ற நம்பிக்கை எங்களுக்கும், அவருக்கும் இருக்கிறது’ என்றாா் முதல்வா்.
கொள்கையில் உறுதி: பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறீா்கள். ஆனால், மத்திய அரசின் செயல்பாடுகள் அப்படி இருக்கிா என செய்தியாளா் ஒருவா் கேட்டதற்கு, ‘எங்கள் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல், எங்களது கோரிக்கைகளைத் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். கொள்கையை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். அதில் உறுதியுடன் இருக்கிறோம்’ என்று முதல்வா் பதிலளித்தாா்.
டிரெண்டிங்
பேரவைத் தோ்தலுக்குப் பிறகு அதிமுகவை பாஜக தன்வசப்படுத்திக்கொள்ளும்

ஓபிசி கிரீமி லேயா் மீதான தீா்ப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
சமையல் எரிவாயு விலை உயா்வு மத்திய பாஜக அரசின் மகளிா் தின பரிசு: முதல்வா் ஸ்டாலின்
கூட்டணிக் கட்சியுடன் ஒப்பந்தம் வெற்றிகரமாக பேசி முடிப்பு - முதல்வா் ஸ்டாலின் பேச்சு
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

