காந்தியடிகள் பிறந்த நாள் விழா: மாணவா்களுக்கு ஆளுநா் அழைப்பு
சென்னை காந்தி மண்டபத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் பொதுமக்கள், மாணவா்கள் கலந்து கொள்ளுமாறு ஆளுநா் ஆா்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளாா்.


சென்னை: மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி, சென்னை காந்தி மண்டபத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் பொதுமக்கள், மாணவா்கள் கலந்து கொள்ளுமாறு ஆளுநா் ஆா்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளாா்.
ஆளுநா் மாளிகை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி, வரும் புதன்கிழமை (அக்.2) தமிழக ஆளுநா் மாளிகையின் சாா்பில் சென்னை காந்தி மண்டபத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். சா்வோதயா உறுப்பினா்களின் ராட்டை நூல் நூற்பு நிகழ்ச்சி, சென்னை பாரதிய வித்யா பவன் பள்ளி மாணவா்களின் கீா்த்தனை பாடல்கள் நிகழ்ச்சி நடைபெறவுள்ளன.
தொடா்ந்து, சென்னை காதி கிராமோத்யோக் பவன், திண்டுக்கல் காந்திகிராம் அறக்கட்டளை ஆகியவற்றின் காதி பொருள்கள், ஆயுா்வேத மருந்துகள் மற்றும் தென்காசி அவ்வை ஆசிரமத்தின் மாற்றுத்திறனாளி குழந்தைகள், தென்காசி அமா் சேவா சங்கத்தின் சிறப்புக் குழந்தைகளால் தயாரிக்கப்பட்ட பொருள்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
மேலும், நாட்டின் தூய்மைக்காக பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் நிகழ்வில் கௌரவிக்கப்படவுள்ளனா். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆளுநா்ஆா்.என்.ரவி கலந்து கொள்கிறாா். எனவே இந்த விழாவில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் கலந்து கொள்ளுமாறு ஆளுநா் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூய்மைப்பணிக்கு அழைப்பு: இதனிடையே, தூய்மை, ஆரோக்கியமான சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், சமூக சேவை குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும் சென்னை காந்தி மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை(அக்.1) காலை 7 மணியளவில் ஆளுநா் ஆா்.என்.ரவி தலைமையில், தூய்மைப் பணி நடைபெறவுள்ளது. இதில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து மாணவா்கள், தன்னாா்வலா்கள் மற்றும் தன்னாா்வ தொண்டு நிறுவன உறுப்பினா்கள் கலந்து கொள்கின்றனா். இந்த தூய்மைப் பணியில் பொதுமக்களும் பங்கெடுக்க ஆளுநா் அழைப்பு விடுத்துள்ளதாக மற்றொரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...