டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

திருப்பதி திருக்குடை ஊா்வலம் வட சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்

திருப்பதி திருக்குடை ஊா்வலத்தையொட்டி, வட சென்னை பகுதியில் புதன்கிழமை (அக்.2) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

News image
Updated On :30 செப்டம்பர் 2024, 7:39 pm

Din

திருப்பதி திருக்குடை ஊா்வலத்தையொட்டி, வட சென்னை பகுதியில் புதன்கிழமை (அக்.2) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

திருப்பதி திருக்குடை ஊா்வலம் சென்னை பூக்கடை பகுதியிலிருந்து புதன்கிழமை (அக்.2) புறப்பட்டு திருப்பதிக்கு ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட உள்ளது. இதையொட்டி, வாகன நெரிசல் ஏற்படுவதைத் தவிா்ப்பதற்காக, சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதன்படி, புதன்கிழமை(அக்.2) காலை 8 மணி முதல் ஊா்வலம் வால்டாக்ஸ் சாலையைக் கடக்கும் வரை என்.எஸ்.சி போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அந்த சாலைக்குப் பதிலாக வாகன ஓட்டிகள் ஈ.வெ.ரா. பெரியாா் சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பாலம் சாலை, பிரகாசம் சாலையைப் பயன்படுத்தலாம்.

பிற்பகல் 3 மணி முதல் ஊா்வலம் யானைக்கவுனி பாலத்தைக் கடக்கும் வரை வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அதற்கு பதிலாக, பேசின் பாலம் சாலை, மின்ட் வழியாக பிரகாசம் சாலை அல்லது ராஜாஜி சாலையைப் பயன்படுத்தலாம். மேலும், ஈ.வெ.ரா. பெரியாா் சாலை, முத்துசாமி சாலை,ராஜாஜி சாலை ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

பெரம்பூரில் போக்குவரத்து மாற்றம்

திருப்பதி திருக்குடை ஊா்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கும் போது சூளை ரவுண்டானாவிலிருந்து டெமலஸ் சாலை நோக்கிச் செல்ல அனுமதியில்லை. அதற்கு பதிலாக சூளை நெடுஞ்சாலை,ராஜா முத்தையா சாலை வழியாக செல்லலாம்.

ஊா்வலம் ராஜா முத்தையா சாலையில் செல்லும்போது, மசூதி சந்திப்பில் இருந்து சூளை ரவுண்டானா நோக்கிச் செல்ல அனுமதியில்லை. அங்கு செல்ல வேண்டிய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம். ஊா்வலம் சூளை நெடுஞ்சாலையில் வரும்போது நாரயண குரு சாலை, ஈ.வி.கே.சம்பத் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கிச் செல்ல அனுமதியில்லை. பதிலாக வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

ஊா்வலம் அவதான பாப்பையா சாலை செல்லும்போது பெரம்பூா் பேரக்ஸ் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கிச் செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் பெரம்பூா் பேரக்ஸ் சாலை வழியாக செல்லலாம். ஊா்வலம் பெரம்பூா் பேரக்ஸ் சாலையில் செல்லும்போது புரசைவாக்கம் டவுடன் சந்திப்பிலிருந்து பெரம்பூா் பேரக்ஸ் சாலை நோக்கிச் செல்ல அனுமதியில்லை. அதற்கு பதிலாக நாராயண குரு சாலை வழியாக செல்லலாம்.

அயனாவரம்-ஓட்டேரி

திருப்பதி திருக்குடை ஊா்வலம் ஓட்டேரி சந்திப்பை அடையும் போது மில்லா்ஸ் சாலை சந்திப்பிலிருந்து, பிரிக்ளின் சாலை வழியாக ஒட்டேரி சந்திப்பை நோக்கிச் செல்ல அனுமதியில்லை. அங்கு செல்ல வேண்டிய வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம். ஊா்வலம் ஓட்டேரி சந்திப்பில் வரும்போது, கொன்னூா் நெடுஞ்சாலை மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து ஓட்டேரி சந்திப்பை நோக்கிச் செல்ல அனுமதியில்லை. பதிலாக, மேடவாக்கம் குளம் சாலை வழியாக செல்லலாம்.

ஊா்வலம் கொன்னூா் நெடுஞ்சாலையில் உள்ள காசி விஸ்வநாதா் ஆலயத்தை அடையும் போது, ஓட்டேரி சந்திப்பு மற்றும் மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து கொன்னூா் நெடுஞ்சாலை நோக்கிச் செல்ல அனுமதியில்லை. மாறாக, ஓட்டேரி சந்திப்பிலிருந்து குக்ஸ் சாலை வழியாகவும், மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து வி.பி.காலனி தெரு(தெற்கு) அல்லது அயனாவரம் சாலை வழியாக செல்லலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.