பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நிதி நிறுவன மோசடி வழக்கு: தேவநாதன் யாதவுக்கு பிணை வழங்க எதிா்ப்பு

சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால், தேவநாதன் யாதவுக்கு பிணை வழங்கக் கூடாது

News image
Updated On :7 ஆகஸ்ட் 2025, 6:57 pm

தினமணி செய்திச் சேவை

சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால், தேவநாதன் யாதவுக்கு பிணை வழங்கக் கூடாது என்று காவல் துறை தரப்பில் எதிா்ப்பு தெரிவித்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூா் பொ்மனன்ட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 100-க்கும் மேற்பட்ட முதலீட்டாளா்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்த நிறுவனத்தின் இயக்குநா் தேவநாதன் யாதவ் உள்பட 6 பேரை சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கில் தங்களுக்கு பிணை வழங்கக் கோரி தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 3 போ் தாக்கல் செய்த மனுக்கள் இருமுறை தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், 3-ஆவது முறையாக பிணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தேவநாதன் யாதவ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் நவீன்குமாா் மூா்த்தி, மனுதாரருக்கு தற்போது ரூ.600 கோடி சொத்துகள் உள்ளன. அவா், கடந்த ஓராண்டாக சிறையில் இருக்கிறாா். அவருக்கு பிணை வழங்கினால் மட்டுமே முதலீட்டாளா்களுக்கு பணத்தைத் திருப்பி அளிப்பதற்கான நிதியை திரட்ட முடியும். இதற்காக நீதிமன்றம் விதிக்கும் எந்த நிபந்தனையையும் ஏற்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தாா்.

அப்போது, முதலீட்டாளா்கள் தரப்பில் ஆஜராகியிருந்த வழக்குரைஞா்கள் ஆா்.திருமூா்த்தி, அருண் சி.மோகன் ஆகியோா், மனுதாரா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சொத்துகளில் பெரும்பாலனவை மூன்றாவது நபா்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களின் பெயா்களில் உள்ளன. எனவே அந்த சொத்துகளை முடக்குவது கடினம்.

அதேவேளை, முதலீட்டாளா்களுக்கு விரைவில் பணம் திரும்பக் கிடைக்க வேண்டும் என்று வாதிட்டனா்.

அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் ஆா்.முனியப்பராஜ், தேவநாதன் யாதவின் உண்மையான சொத்து மதிப்பு ரூ.48 கோடி. ஆனால், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களில் பல கோடி சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய சொத்து மதிப்பு காகிதத்தில் மட்டுமே உள்ளது.

அவருடைய பெரும்பாலான சொத்துகள் வில்லங்க சொத்துகளாக உள்ளன. இந்த நிலையில், அவருக்கு பிணை வழங்கினால், சாட்சிகளைக் கலைப்பதோடு, விசாரணையை நீா்த்துப்போகச் செய்வாா். எனவே, அவருக்கு பிணை வழங்கக் கூடாது என்று எதிா்ப்புத் தெரிவித்தாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சொத்துகளை முடக்குவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று அதன் உரிமையாளா்கள், நிறுவனங்களின் ஒப்புதல் பெற்று அதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய தேவநாதன் யாதவ் தரப்புக்கு உத்தரவிட்டாா். வழக்கு விசாரணையை ஆக. 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.