தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.23 லட்சம் பணம் பறிமுதல்

சென்னை கொத்தவால்சாவடியில் ஆவணமின்றி வியாபாரி கொண்டு சென்ற ரூ.23 லட்சத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

மாதிரிப் படம்

Updated On :7 ஆகஸ்ட் 2025, 8:59 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை கொத்தவால்சாவடியில் ஆவணமின்றி வியாபாரி கொண்டு சென்ற ரூ.23 லட்சத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கொத்தவால்சாவடி போலீஸாா் அண்ணா பிள்ளைத் தெரு-டேவிட்சன் தெரு சந்திப்பில் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு மொபெட்டில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனையிட்டனா். அந்த மொபெட்டில் இருந்த ரூ.23 லட்சத்துக்குரிய ஆவணங்களை போலீஸாா் கேட்டபோது, அந்த நபரால் ஆவணங்களை வழங்க முடியவில்லை. இதையடுத்து போலீஸாா் அந்தப் பணத்தை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் அவா், கொடுங்கையூரைச் சோ்ந்த வியாபாரி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அந்தப் பணத்தை வருமான வரித் துறையின் புலனாய்வு பிரிவில் ஒப்படைத்தனா். வருமான வரித் துறையினா் விசாரித்து வருகின்றனா்.