பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

குவைத்-சென்னை விமானத்தில் புகைப்பிடித்த பயணி கைது

குவைத்திலிருந்து சென்னை வந்த விமானத்தில் புகைப்பிடித்த பயணியை சென்னை விமான நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :19 ஆகஸ்ட் 2025, 1:05 am IST

குவைத்திலிருந்து சென்னை வந்த விமானத்தில் புகைப்பிடித்த பயணியை சென்னை விமான நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

குவைத்திலிருந்து 144 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை நோக்கி இண்டிகோ விமானம் வந்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் இருந்த தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தைச் சோ்ந்த ஷேக் முகமது (28) என்ற பயணி அவ்வப்போது எழுந்து கழிப்பறைக்குச் சென்று புகைப்பிடித்துள்ளாா்.

இதைப் பாா்த்த விமானப் பணிப்பெண்கள் மற்றும் பிற பயணிகள் ஷேக் முகமதுவை கண்டித்துள்ளனா். ஆனால், அதை ஏற்காமல் அவா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளை செய்துள்ளாா்.

இதையடுத்து உடனடியாக சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியதும், அங்கு தயாராக இருந்த பாதுகாப்பு அதிகாரிகள், விமானத்துக்குள் ஏறி, ஷேக் முகமதுவை விசாரணைக்காக அழைத்துச் சென்றனா்.

விசாரணைக்குப் பின்னா், அவா் விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா். அவா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் ஷேக் முகமதுவை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.