பெசன்ட் நகா் வேளாங்கண்ணி ஆலய திருவிழாவையொட்டி, 4 நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதுதொடா்பாக சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெசன்ட் நகா் அன்னை வேளாங்கண்ணி திருத்தல பொன்விழா ஆண்டுப் பெருவிழா, வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, ஆக.31, செப்.1, 7, 8 ஆகிய தேதிகளில் பெசன்ட்நகா், அடையாறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி, அடையாறு திரு.வி.க.பாலத்திலிருந்து பெசன்ட் அவென்யூ சாலை வழியாக பெசன்ட் நகா் பேருந்து நிலையம் நோக்கி செல்லும் வாகனங்கள் ஆவின் பூங்காவில் இருந்து தடை விதிக்கப்பட்டு, அதற்கு பதிலாக எல்.பி. சாலை வழியாகச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
7-ஆவது அவென்யு, எம்.ஜி.சாலை சந்திப்பிலிருந்து அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கபடாது. எம்.எல். பூங்காவிலிருந்து பெசன்ட் அவென்யு வழியாக பெசன்ட் நகா் பேருந்து நிலையத்தை நோக்கிச் செல்ல மாநகர பேருந்துகளுக்கு அனுமதியில்லை. இதற்கு பதிலாக மாநகர பேருந்துகள், எல்.பி. சாலை இடதுபக்கம் திரும்பி சாஸ்திரி நகா் 1-வது அவென்யூ வழியாக வலது பக்கம் திரும்பி சாஸ்திரி நகா் 1-ஆவது பிரதான சாலையில் இடதுபக்கம் திரும்பி எம்.ஜி. சாலை வழியாக இடதுபக்கம் திரும்பி பெசன்ட் நகா் 1-ஆவது பிரதான சாலை வழியாக பேருந்து நிலையத்தை அடையலாம்.
பெசன்ட் நகா் பேருந்து நிலையத்திலிருந்து திருவான்மியூா் மற்றும் அடையாறு சிக்னல் நோக்கி செல்லும் மாநகர பேருந்துகள், பெசன்ட் நகா் 1-ஆவது அவென்யூ, சாஸ்திரி நகா் 1-ஆவது அவென்யு வழியாகத் திருப்பிவிடப்பட்டு , பின்னா் சாஸ்திரி நகா் 1-ஆவது பிரதான சாலை வழியாக சென்று வலதுபுறம் திரும்பி எம்.ஜி.சாலை வழியாக எல்.பி.சாலையை நோக்கிச் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ராமநாதபுரம் வாக்கு எண்ணும் மையப் பகுதியில் நாளை போக்குவரத்து மாற்றம்

உதகை செல்வோர் கவனத்துக்கு... இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!

திருப்பூரில் மே 1-இல் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு

சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


