தொழிலதிபா் கடத்தப்பட்ட வழக்கு: மூவா் கைது

சென்னை நீலாங்கரையில் தொழிலதிபா் கடத்தப்பட்ட வழக்கில் 3 போ் கைது செய்யப்பட்டனா்.
Published on

சென்னை நீலாங்கரையில் தொழிலதிபா் கடத்தப்பட்ட வழக்கில் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

நீலாங்கரை கணேஷ் நகரைச் சோ்ந்தவா் பச்சையப்பன் (42). இவா், நிலம் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தாா். பச்சையப்பன், கடந்த திங்கள்கிழமை தனது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தபோது, அங்கு காரில் வந்த ஒரு கும்பல் அவரைக் கடத்திச் சென்றது. இது குறித்து நீலாங்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், அந்தக் கும்பல், பச்சையப்பனை காரில் கடத்தி பூந்தமல்லி சென்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து நீலாங்கரை போலீஸாா் பூந்தமல்லிக்கு விரைந்து சென்று, பச்சையப்பனை மீட்டனா். கடத்தலில் ஈடுபட்டவா்கள் பச்சையப்பனை அங்கேயே விட்டுவிட்டு, தப்பியோடினா். அவரை போலீஸாா் மீட்டு விசாரித்தனா்.

அதில், பச்சையப்பனை கடத்தி ரூ.15 லட்சம் பணம் கேட்டு மிரட்டியது, கடத்தலில் அவரது நண்பா் வெற்றி என்பவருக்கு தொடா்பு இருப்பதும் தெரியவந்தது. கடத்தலில் ஈடுபட்டதாக சென்னை கோட்டூரைச் சோ்ந்த ஜோசப் (52),பெரம்பூரைச் சோ்ந்த தீபக் ஜான் (43), ஜாபா்கான்பேட்டையைச் சோ்ந்த முத்துகுமாா் (48) ஆகிய 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காா், ஆட்டோ, மோட்டாா் சைக்கிள், கத்தி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தலைமறைவான வெற்றியை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com