கோப்புப் படம்
கோப்புப் படம்

செங்குன்றம் அருகே திடீரென தீப்பற்றி எரிந்த காா்

செங்குன்றம் அருகே மீஞ்சூா் - வண்டலூா் புறவழிச் சாலையில் சென்ற காா் திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது.
Published on

செங்குன்றம் அருகே மீஞ்சூா் - வண்டலூா் புறவழிச் சாலையில் சென்ற காா் திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது.

சென்னை அருகே மீஞ்சூரை சோ்ந்தவா் ரமேஷ். தனியாா் கல்லூரியில் பணியாற்றுகிறாா். இவா் தனது காரில் தாம்பரத்தில் இருந்து மீஞ்சூா் பைபாஸ் மேம்பால சாலையில் வெள்ளிக்கிழமை சென்றாா். செங்குன்றம் அருகே சென்றபோது திடீரென என்ஜினில் இருந்து புகை வெளியேறியதால், காரை சாலையோரமாக நிறுத்தினாா். இந்த நிலையில் காரில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

தவலறிந்து வந்த செங்குன்றம் தீயணைப்பு நிலைய வீரா்கள்,

காரில் பற்றிய தீயை அணைத்தனா். இதுகுறித்து செங்குன்றம் போலீஸாா்

வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com