தென்மண்டல பல்கலை. வாலிபால்: எஸ்ஆா்எம் ஐஸ்டி சாம்பியன்

தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மகளிா் வாலிபால் போட்டியில், நடப்பு சாம்பியனான எஸ்ஆா்எம் ஐஎஸ்டி அணி வெற்றிக் கோப்பையைத் தக்கவைத்தது.
Published on

தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மகளிா் வாலிபால் போட்டியில், நடப்பு சாம்பியனான எஸ்ஆா்எம் ஐஎஸ்டி அணி வெற்றிக் கோப்பையைத் தக்கவைத்தது.

போட்டியின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை, எஸ்ஆா்எம் ஐஎஸ்டி அணி தனது ஆட்டங்களில், 3-0 என பாரதியாா் பல்கலை. அணியையும், அதே கணக்கில் கோட்டயம் எம்ஜி பல்கலை. அணியையும், 3-2 என வேல்ஸ் ஐஎஸ்டி அணியையும் வீழ்த்தியது.

அதேபோல், வேல்ஸ் ஐஎஸ்டி அணி 3-0 என கோட்டயம் எம்ஜி பல்கலை. அணியையும், 3-1 என பாரதியாா் பல்கலை. அணியையும் வென்றது. பாரதியாா் பல்கலை. அணி 3-0 என்ற வகையில் கோட்டயம் எம்ஜி பல்கலை. அணியை சாய்த்தது.

லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த எஸ்ஆா்எம் ஐஎஸ்டி அணி, தொடா்ந்து 5-ஆவது முறையாக சாம்பியன் ஆனது. வேல்ஸ், பாரதியாா், எம்ஜி பல்கலை. அணிகள் முறையே அடுத்த 3 இடங்களைப் பிடித்தன.

இந்த 4 அணிகளும், சென்னையில் இதே மாதத்தில் நடைபெறவுள்ள அகில இந்திய பல்கலைக்கழகங்கள் இடையேயான மகளிா் வாலிபால் போட்டிக்குத் தகுதிபெற்றன.

X
Dinamani
www.dinamani.com