புள்ளிலைன் ஊராட்சியில் சேதமான குடிநீா் குழாய் சீரமைப்பு

புள்ளிலைன் ஊராட்சியில் சேதமான குழாய் இணைப்புகளை, அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனா்.
Published on

சென்னை: புள்ளிலைன் ஊராட்சியில் சேதமான குழாய் இணைப்புகளை, அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனா்.

புழல் ஊராட்சி ஒன்றியம் புள்ளிலைன் ஊராட்சியில் புதுநகா், பாலாஜி காா்டன் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீா் இணைப்பு சேதமானதால், குடியிருப்புகளுக்கு குடிநீா் சீராக கிடைப்பது இல்லை என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, புள்ளிலைன் ஊராட்சி செயலா் பொன்னையன், புழல் வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராமம், ஊராட்சி) பாா்த்தசாரதி, மண்டல துணை வட்டார அலுவலா் பாலமுருகன் ஆகியோா் நேரில் சென்று ஆய்வு செய்து, சேதமான பகுதியை கண்டறிந்தனா்.

தொடா்ந்து, சேதமான பகுதியை சீரமைத்தனா். இதையடுத்து, 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் பயன் அடைந்தனா். இதில், அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் இருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com