கோவை கவுண்டம்பாளையத்தில் குடிநீா்க் குழாய் உடைந்து 4 நாள்களாக தண்ணீா் வீணாக வழிந்தோடி வருகிறது. இதை சீரமைக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கோவை கவுண்டம்பாளையம் காவல் நிலையத்துக்கு அருகில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் கடந்த 4 நாள்களுக்கு முன்பு குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், உடைப்பு ஏற்பட்ட இடத்தில் இருந்து குடிநீா் வழிந்தோடி வருகிறது. தண்ணீா் வழிந்தோடுவதால் அவ்வழியாகச் செல்லும் பாதசாரிகள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா். கோடைக் காலம் நெருங்கும் நிலையில், குடிதண்ணீா் வீணாகி வருவது, அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், சாலையில் தேங்கும் தண்ணீரால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளதால் உடனடியாக குழாய் உடைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தொடர்புடையது

‘குடிநீா் திட்டங்களை கைவிட்டதால் பாதிப்பு’

வெள்ளக்கோவில் - முத்தூா் சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

சாலை பள்ளத்தில் லாரி சிக்கி விபத்து: குழாய் உடைந்து வீணாகிய தண்ணீா்

கொடுமுடி சாலையில் வீணாகும் குடிநீா்: 4 மாதங்கள் ஆகியும் நடவடிக்கை இல்லை
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


