

சென்னையில் மெரீனா உள்ளிட்ட கடற்கரைகளில் பல லட்சம் பேர் திரண்டு ஆங்கிலப் புத்தாண்டை (2026) வரவேற்றனர்.
ஆங்கில புத்தாண்டையொட்டி மெரீனா, பெசன்ட் நகர், அடையாறு, பட்டினப்பாக்கம் கடற்கரைகளில் புதன்கிழமை மாலை 6 மணி முதலே ஏராளமானோர் குவியத் தொடங்கினர். இரவு 9 மணி முதல் பொதுமக்கள் கூட்டம் வெகுவாக அதிகரித்தது. சிறுவர்}சிறுமியர் முதல் முதியோர் வரை ஆங்காங்கே குழுக்கள், குழுக்களாகப் பிரிந்து ஆடிப் பாடி, ஆரவாரம் செய்தபடி இருந்தனர்.
நள்ளிரவு 11.30 மணிக்கு சென்னை நகரின் பல இடங்களில் லேசான மழை பெய்யத் தொடங்கியது.
மழையைப் பொருட்படுத்தாமல் நனைந்தபடியே ஆடிப்பாடி, ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர்.
நள்ளிரவு சரியாக 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததையொட்டி, பட்டாசுகள் வெடித்து, ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
சில இடங்களில் மெழுகுவர்த்தி ஏற்றியும், கேக் வெட்டியும் புத்தாண்டைக் கொண்டாடினர். கடற்கரைப் பகுதிகளில் நள்ளிரவு 1 மணிக்குப் பிறகே கூட்டம் கலையத் தொடங்கியது.
புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை: புத்தாண்டு பிறப்பையொட்டி, சென்னையில் உள்ள மயிலாப்பூர் சாந்தோம் தேவாலயம், பெசன்ட் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம், அண்ணா நகர் புனித லூக்கா தேவாலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் 19 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.