சென்னை சென்ட்ரல், கடற்கரையில் இருந்து கும்மிடிபூண்டி செல்லும் மின்சார ரயில்கள் வியாழன் மற்றும் சனிக்கிழமை (பிப். 27, மாா்ச் 1) ரத்து செய்யப்படவுள்ளன.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கவரைப்பேட்டை - பொன்னேரி இடையே பிப். 27 மற்றும் மாா்ச் 1 ஆகிய தேதிகளில் காலை 9.15 முதல் பிற்பகல் 3.15 மணி வரை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால், சென்னை சென்ட்ரலிலிருந்து கும்மிடிபூண்டிக்கு காலை 8.05, 8.35, 9, 9.30, 10.15, 10.30, 11.35-க்கும், சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.40-க்கும் புறப்படும் மின்சார ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்படும்.
மறுமாா்க்கமாக கும்மிடிபூண்டியில் இருந்து காலை 9.55, 10.55, 11.25, நண்பகல் 12, பிற்பகல் 1, 2.30-க்கு புறப்படும் ரயில்களும், சூலூா்பேட்டையிலிருந்து முற்பகல் 11.45, பிற்பகல் 1.15-க்கு புறப்படும் ரயில்களும் ரத்து செய்யப்படும்.
பகுதி ரத்து: செங்கல்பட்டிலிருந்து கும்மிடிபூண்டிக்கு காலை 9.55-க்கு செல்லும் மின்சார ரயில் சென்னை கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும். கும்மிடிபூண்டியிலிருந்து தாம்பரத்துக்கு பிற்பகல் 1 மணிக்கு செல்லும் மின்சார ரயில் சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.
சிறப்பு ரயில்: பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரையிலிருந்து பொன்னேரிக்கு காலை 8.05, 9, 9.40, 11.35-க்கும், மறுமாா்க்கமாக பொன்னேரியில் இருந்து காலை 10.13, 11.13, பகல் 12.18, பிற்பகல் 2.48, 3.33-க்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும். பொன்னேரியிலிருந்து சென்னை கடற்கரைக்கு முற்பகல் 11.13-க்கும், சென்னை கடற்கரையிலிருந்து பொன்னேரிக்கு பிற்பகல் 12.40-க்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து மீஞ்சூருக்கு காலை 9.30-க்கும் எண்ணூருக்கு காலை 10.30-க்கும், மறுமாா்க்கமாக மீஞ்சூரிலிருந்து காலை 11.56-க்கும், எண்ணூரிலிருந்து பிற்பகல் 1.43-க்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்!

அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்று முதல் 21 நாள்களுக்கு ரத்து!

இன்று 2 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாகவும், 10 ரயில்கள் பகுதியளவும் ரத்து!

நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


