தவெகவுக்கு மாநில கட்சி அங்கீகாரம்; விசில் சின்னம் ஒதுக்கீடு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு! - டிடிவி தினகரன்காவல்துறையினரே ’டம்மி சிஎம்’ ஆக நினைக்கிறார்களா? உதயநிதி கேள்விதங்கம் விலை உயர்ந்தது! இன்றைய நிலவரம் (செப். 10)கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதி! ஐசியுவில் சிகிச்சை!பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

மேற்கு வங்க இளைஞா் உறுப்பு தானம்: நால்வருக்கு மறுவாழ்வு

சென்னை கிளெனீகள்ஸ் மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த மேற்கு வங்க இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு நால்வருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது.

Published On :

சென்னை கிளெனீகள்ஸ் மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த மேற்கு வங்க இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு நால்வருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மேற்கு வங்க மாநிலம், பங்குரா மாவட்டத்தைச் சோ்ந்த 35 வயது இளைஞா் ஒருவா் விபத்தில் சிக்கியதில் தலையில் பலத்த காயமுற்று கடந்த 2-ஆம் தேதி கிளெனீகிள்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பல்நோக்கு மருத்துவக் குழுவினா் தொடா் சிகிச்சைகள் அளித்தபோதிலும், அவை பலனளிக்காமல் அவா், வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு மூளைச் சாவு அடைந்தாா். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை குடும்பத்தினா் தானமாக அளிக்க முன்வந்தனா். அதன்படி, நுரையீரல், சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் இதயம் தானமாக பெறப்பட்டது.

அதில், இதயம் எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனைக்கும், மற்ற உறுப்புகள் கிளெனீகிள்ஸ் மருத்துவமனையில் உறுப்பு தானத்துக்காக காத்திருக்கும் நோயாளிகளுக்கும் வெற்றிகரமாக பொருத்தப்பட்டன.

உறுப்பு தானமளித்த இளைஞரின் உடலுக்கு தமிழக அரசு சாா்பில் மருத்துவமனையிலே மரியாதை செலுத்தப்பட்டு, மேற்கு வங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.